கஜேந்திரன், பிரேமரத்ன இரண்டு எம்.பிக்களின் சம்பவங்களையும் சமமாக கணியுங்கள்…! டிரன் அலசிடம் மனோ கோரிக்கை…!samugammedia

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீது திருகோணமலையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தையும், பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன மீதான அனுராதபுர துப்பாக்கி சூட்டு சம்பவத்தையும் ஒரே மாதிரியான சட்டம்,ஒழுங்கு பிரச்சினையாக கருதி, விசாரித்து குற்றவாளிகளை கைது செய்யுங்கள் என சட்டம், ஒழுங்கு துறை அமைச்சர் டிரன் அலசிடம் கோரியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதேவேளை, அமைச்சர் டிரன் அலஸ் அப்படியே தான் செய்வதாக என்னிடம் உறுதியளித்தார்.

இதுபற்றி தற்சமயம் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவுக்கும் தொலைபேசியில் நான் தொடர்புற்று அறிவித்தேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *