மனைவி விட்டுச்சென்ற துயரத்தில், நபர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என கிரியெல்ல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் உயிரிழந்தர் 36 வயதுடைய கிரியெல்ல – கதலுர பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் ஒரு பிள்ளையின் தந்தை என்பதுடன், அவர் அந்த குழந்தையுடன் தனது மனைவியின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிரியெல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.