முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, விகாரைகள் மீதும் பிக்குகள் மீதும் கை வைத்தால், கை வைப்பவர்களது தலையை எடுத்து களனிக்கு கொண்டு செல்வதாக, களனியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்தார்.
அவரது இந்த கருத்திற்கு பலரும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை மற்றும் ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் அவர்கள், மேர்வின் சில்வாவின் கருத்துக்கு எதிராக கடந்த 16.09.2023 அன்று வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.
அந்த முறைப்பாட்டுக்கு வட்டுக்கோட்டை பொலிஸார் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில் முருகவேல் சதாசிவம் கொழும்பில் உள்ள இலங்கை பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இது குறித்து முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.