நாடு முழுவதும் இந்த வருடம் ஆரம்பம் முதல் நேற்று திங்கட்கிழமை (18) வரையான காலப் பகுதி வரை 75 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் இதன்போது 42 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களில் காயமடைந்த 33 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த வருடத்தின் முதல் சில மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.