குடும்ப விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் பெண் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசி கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளார்.
குறித்த சம்பவம் மத்துகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குடும்ப விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் மீது அசிட் வீசி தாக்கிய இருவரைக் கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.
மத்துகம பின்னகொட பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவர் பாலியல் நடவடிக்கை்காக இன்னுமொரு பெண்ணை பணத்திற்கு விற்பனை செய்வதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இருவரது கணவர்கள் மற்றும் பெண் ஒருவரின் தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் அசிட் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரைத் தவிர்த்து வரும் சந்தேகநபர்கள் இருவரும் மாமா, மருமகன் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அசிட் வீச்சுக்கு இலக்கான மத்துகம பின்னகொட ஹேமலோக மாவத்தையைச் சேர்ந்த பெண் ஒருவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது கண்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
அத்துடன் களுத்துறை குற்றத்தடுப்பு ஆய்வு கூட அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.