நபிகள் நாயகம் அன்னவர்களின் 1498வது மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு புனித கொடியேற்று விழா ஹிஜ்ரி 1445 றபீஉனில்அவ்வல் 01 – 2023 செப்டம்பர் 16 சனிக்கிழமை இடம்பெற்று இன்று (20) 4ஆவது நாளாக நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.
கல்முனை தாறுஸ்ஸபா அமையத்தின் ஏற்பாட்டில் தாறுஸ்ஸபா அமைய பிரதானி மௌலவி உஸ்தாத் ஏ.ஆர். சபா முஹம்மத் தலைமையில் தாறுஸ்ஸபா அமைய தலைமையகத்தில் கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றது.
ஹிஜ்ரி 1445 றபீஉனில்அவ்வல் 01 – 2023 செப்டம்பர் 16 சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்நிகழ்வில் கொடியேற்றப்பட்டதுடன் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிகழ்வில் உலமாக்கள், முன்னாள் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள், கல்முனை தாறுஸ்ஸபா அமையத்தின் நிர்வாகிகள், கலை,அரசியல், இலக்கிய, ஊடகத்துறை சார்ந்தவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.