யாழ்ப்பாணம், நெல்லியடி குஞ்சர் கடையடி சந்தியில் இன்று (20) பிற்பகல் முட்டை ஏற்றி வந்த வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
அச்சுவேலி பகுதியை சேர்ந்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பில் நெல்லியடி போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.