உயிர்த்த ஞாயிறு சம்பவங்களை புதைகுழியில் போடுவதற்காக புலிகள் மேல் குற்றத்தை சுமத்துவதை இத்துடன் நிறுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்
பாராளுமன்றில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் மீண்டும் சனல் 4வில் ஒளிபரப்பான செய்திகளை வைத்துக்கொண்டு ஆரம்பத்திலே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கும் போது இந்த சம்பவம் தொடர்பில் தன்னுடைய அறிக்கையை சமர்ப்பிக்கின்ற போதிலும் கூட அந்த சம்பவம் நடைபெற்ற பின்பு இந்தியா சொல்வதை ஒத்துக்கொண்டு அதற்கான விசாரணையை நடத்துகின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலையே காணப்படுகின்றது.
ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வரவேண்டும், சிங்கள மக்களுடைய வாக்குகளை பெறுவதற்காக இந்த நாட்டிலே வாழுகின்ற தமிழ்பேசும் மக்களை அழிப்பதன் ஊடாக அவர்களுடைய உயிர்களை பணயம் வைத்து வாக்குகள் எடுக்கப்படுகின்றதா என்கின்றதான சந்தேகம் தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிப்படைந்த முஸ்லீம் சமூகம் என்றும் ஒரு சிலரின் நடவடிக்கை காரணமாக எப்படி தமிழ் மக்கள் துரோகிகளாக பார்க்கப்பட்டார்களோ அதனைப்போல இந்த சந்தர்ப்பத்தின் பின்னர் முஸ்லீம் மக்கள் ஒளிந்து மறைந்து தலைக்குனிவோடு இருக்கின்ற இந்த சூழ்நிலையிலே சனல் 4 அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கூடுதலாக கிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்த காரணம் கிறிஸ்தவ முஸ்லீம் உறவை பிரிப்பதற்குரிய வாய்ப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார் தொடர்ச்சியாக ஆண்டகை அவர்களுடைய விடா முயற்சியால் இன்றைக்கு சனல் 4 தொலைக்காட்சி மூலம் நியாயம் கிடைக்குமா என்றும் ஒரு சர்வதேச விசாரனையை அவர் கூறுகின்றார்
இந்த விடயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுள் வெளிநாட்டவர்களும் உள்ளனர் எனவும் இதற்கு உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உள்ளக விசாரனை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இதிலே ரஞ்சித் ஆண்டகையின் குரல் சர்வதேச அளவிலே ஓங்கியுள்ளது என்றும் அது நடைமுறைப்படுத்தபட வேண்டும் எனவும் அவருடைய கோரிக்கையை நாங்கள் வலுவாக ஆதரிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் போர் காலத்திலே கொத்துக் கொத்தாக தேவாலயங்களில் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்றும் மனித உரிமைகள் மீறப்பட்டது எனவும் வடக்கு கிழக்கிலே நடந்த அசம்பாவினங்களுக்கும் ரஞ்சித் ஆண்டகையின் குரல் ஒலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நியாயம் கிடைக்கின்ற போது தான் உண்மை எது பொய் எது என்று தெரிய வரும்.சனல் 4ல் வெளியான தகவல்கள் பொய் என்று கூற முடியாது.
மேலும் வாக்கு வங்கிகளை பெற்றுக்கொள்வதற்காக அப்பாவி உயிர்களை பலி கொடுத்தார்கள் என்று சொல்லும் போது எமது நாட்டில் உள்ள தலைவர்களை மக்கள் எவ்வாறு நம்புவார்கள் என்றும் இவற்றுக்கு நான் ஒரு இலங்கையனாக தலைகுனிகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்;
மேலும் முஸ்லீம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர்களுடைய இறையாண்மை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இச் சம்பவங்களை கிடப்பிலே போடுவதற்காக புலிகளை மேல் சாட்டுகின்ற ஒரு பிரச்சனை அனேகருக்கு இருக்கின்றது இவ்வாறு புலிகளை சொல்லுகின்றதை இனியும் சொல்ல வேண்டாம்.
மேலும் பாராளுமன்றத்திலே 225 பேரும் ஆதரிப்பார்களோ தெரியவில்லை நாடாளுமன்றத்திலே இதனை ஆதரிப்பதற்கு முன்வர வேண்டும் என கூறியுள்ளார். அந்த வகையிலே உயிர்த்த ஞாயிறு சம்பவத்தின் காரணம் என்பது மிக மோசமாக சித்தரிக்கப்படுகின்றது எனவும் வெறும் வாக்குகளுக்காக அப்பாவிகளுடைய உயிரை எடுப்பது குறித்து இதனை சர்வதேச விசாரனையாக மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்