சமாதானமின்மையினால் ஏற்பட்ட வடுக்களை நிவர்த்தி செய்யவே அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்துள்ளோம் என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
உலக சமாதான நாளான இன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்,
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் சமாதானமின்மையினால் ஏற்பட்ட வடுக்களை நிவர்த்தி செய்யும் முகமாக அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்த நிகழ்வாகவே முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
எமது நாட்டினை பொறுத்தமட்டில் சமாதானமின்மையால் ஏற்பட்ட பிரச்சினைகள் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் , அண்மையில் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் இதனுடன் ஒப்பிடுகையில் இனிமேல் எந்தவகையிலேயும் சமாதானம் இல்லாமல் போகக்கூடாது என்ற அடிப்படையில் இவ்வாறான உலக சமாதான தினத்தினை நாங்கள் உரிய முறையில் மக்களுக்கும், மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமாதானம் இல்லை என்ற நிலமை ஏற்படாமல் சமாதானத்துடன் வாழக்கூடிய நிலமை ஏற்படுத்தும் விதமான நிகழ்வாக இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது என மேலும் தெரிவித்தார்.