ரஷ்யாவின் கடல் முற்றுகை இருந்தபோதிலும் இலங்கை உள்ளிட்ட பிற நாடுகளுக்கு தானியங்களை வழங்கியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அதேவேளை அல்ஜீரியா, ஜிபூட்டி, எகிப்து, கென்யா,லிபியா,லெபனான் மொராக்கோ, சோமாலியா, துனிசியா,பங்களாதேஷ், சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா,இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், ஈராக், ஓமன், பாகிஸ்தான், துர்கியே மற்றும் ஏமன் ஆகிய நாடுகளையும் உக்ரைன் ஜனாதிபதி பெயரிட்டுள்ளார்.
“எங்கள் தயாரிப்புகள் துறைமுகங்கள் வழியாக எத்தியோப்பியா மற்றும் சூடானை அடைந்துள்ளன.மொத்தமாக 32மில்லியன் தொன் உணவு வழங்கியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
அதேவேளை, உக்ரைனின் ஏற்றுமதித் திட்டங்கள்,கருங்கடல் தானிய முயற்சிகளுக்கு ஆதரவளித்த அனைத்து தலைவர்களுக்கும் ஜனாதிபதி நன்றி கூறினார்.
‘ஒன்றாகச் செயல்பட்டால் இன்னும் பலவற்றைச் சாதிக்கலாம். உலகளாவிய உணவு நெருக்கடியைத் தணிக்க உக்ரைன் மிகவும் உறுதியான நடவடிக்கைகளை முன்மொழிகிறது,’என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.