உறவினர்களின் கவனக்குறைவால் பேருந்தில் காணாமல் போன குழந்தையொன்று தொடர்பில் கிருலபனை பகுதியில் பதிவாகியுள்ளது.
குறித்த குழந்தை உறவினர்கள் குழுவுடன் கொழும்பு அருங்காட்சியகத்தை பார்வையிட வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேருந்து எண் 138-ல் வந்த உறவினர்கள் அருங்காட்சியகம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.
இதன் போது, அவர்கள் குழந்தையை தவறவிட்டுள்ள நிலையில், உறவினர்கள் பேருந்தில் இருந்து இறங்கியதை அறியாமல், ஓடும் பேருந்தில் குழந்தை சிறிது தூரம் பயணித்துள்ளது.
பின்னர் பேருந்தில் உறவினர்கள் இல்லை என்பதை அறிந்து குழந்தை அழ ஆரம்பித்ததும் பேருந்தில் இருந்த பயணிகளும் நடத்துனரும் சேர்ந்து குழந்தையை கிருலப்பனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், குழந்தை காணாமல் போனதை உணர்ந்த உறவினர்கள், குழந்தையைத் தேடி பேருந்து சென்ற வீதியில் முன்னோக்கி நடந்துள்ளனர்.
அதன்படி கிருலப்பனை பொலிஸ் நிலையத்திற்கு வந்த குழுவினர் குழந்தையை பெற்றுக் கொண்டுள்ளனர்.
பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் நடத்துனரின சாதுர்யமான நடவடிக்கையால் இடம்பெறவிருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
குழந்தைகளுடன் பயணம் செய்யும் போது, பெரியவர்கள் அவர்களைக் கவனித்துக்கொள்வதன் மூலம் இதுபோன்ற சூழ்நிலைகளைத் தவிர்க்கலாம்.