கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் ஆலயத்தை பார்வையிட 33 வருடங்களின் பின்னர் இராணுவத்தினர் அனுமதி ! samugammedia

கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் தேவஸ் தானம் கடந்த 1990 ம் ஆண்டுக்கு பின்னர் 33 வருடங்களுக்கு பின்னர்  ஆலயத்தை சென்று பார்வையிடுவதற்கும் ஆலய வழிபாட்டிற்கும் ராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர்.

கட்டுவன் காசியம்மாள் அம்மன் ஆலய தேவஸ்தானத்தினரால் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா  மகேஸ்வரனிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக விஐயகலா மகேஸ்வரன் எடுத்த முயற்சியின் பயனாக குறித்த ஆலயத்தினை சென்று பார்வையிடுவதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்த நிலையில் இன்று மாலை இராணுவத்தினரின்  அனுமதியுடன் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள குறித்த ஆலயத்தினை சென்று  பார்வையிட்டதோடு ஆலயத்தில்  பூஜை வழிபாடுகளும்  குருமார்களினால் முன்னெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *