2023 ஆம் ஆண்டுக்காக இடம்பெறவுள்ள கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் சிலர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரையில் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையை பிற்போட்டு தங்களது கற்றல் நடவடிக்கைக்கு போதுமான காலத்தை பெற்றுதருமாறு கோரி அவர்கள் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.
அதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பத்தில் நடைபெறவிருந்த உயர்தர பரீட்சை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிற்போடப்பட்டிருந்தது.
இதன்படி, உயர் தர பரீட்சைக்கான புதிய திகதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் விரைவில் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.