முந்தல் பிரதேச செயலக கள உத்தியோகத்தர்களுக்கான விசேட செயலமர்வு…!samugammedia

” அரச உத்தியோகத்தர்களின் பொறுப்புக் கூறல்” எனும் தலைப்பில் முந்தல் பிரதேச செயலகத்தின் கீழ் கடமைபுரியும் கள உத்தியோகத்தர்களுக்கான விஷேட செயலமர்வொன்று முந்தல் சமுது வரவேற்பு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. 
“வேல்ட் விஷன் லங்கா” அமைப்பு ஏற்பாடு செய்த இந்த செயலமர்வில் முந்தல் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் டபிள்யூ. ரி.எம்.எஸ்.பி. மல்வில, முந்தல் பிரதேச செயலக நிர்வாக கிராம உத்தியோகத்தர் கே.எஸ்.எம்.ஷிரோமி, முந்தல் சமுர்த்தி  தலைமையக முகாமையாளர் ஆர்.டி.ஏ.ஐ.ஆரியரத்ன உட்பட முந்தல் பிரதேச செயலகத்தின் கீழ் கடமைபுரியும் அனைத்து கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
இந்த செயலமர்வில் சட்டத்தரணி ஜீவனி காரியவசம் வளவாளராக கலந்துகொண்டார்.
இதன்போது, தகவல் அறியும் சட்டமும்  அதன் நன்மைகளும், தீமைகளும் எனும் தலைப்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், குழுச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.
அத்துடன், அரச சேவை மக்களுக்கு சென்றடையும் விதம் தொடர்பிலும், டிஜிடல் மயம் மூலம் மக்களுக்கு பூரணமான சேவையை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பிலும் உத்தியோகத்தர்களுக்கு இதன்போது தெளிவூட்டப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *