முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேரங்கண்டல் மங்கை நகர் பகுதியில் உள்ள கதவுகள் பூட்டப்பட்ட வீடு ஒன்றுக்குள் தூக்கில் தொங்கியவாறு அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (23) காலை அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 28 வயதான உத்தமன் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அயலவர்களால் மல்லாவி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மல்லாவி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.