கடந்த வாரம் கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் இன்று காலை 08.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
செப்டெம்பர் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கியூபாவின் ஹவானாவில் நடைபெற்ற G-77 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி, பின்னர் அமெரிக்காவில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது வருடாந்த அமர்வின் அரச தலைவர்களின் உச்சி மாநாட்டிலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.