இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியினுள் இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி 11.9 சதவீத்தால் அதிகரித்துள்ளது.
இந்த விடயத்தை இலங்கை மத்திய வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அத்துடன், கடந்த வாரம் இலங்கை ரூபா, ஜப்பானிய யெனுக்கு நிகராக 24.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதேவேளை, ஸ்ரேலிங் பவுண்ஸ்சிற்கு நிகராக 9.7 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
மேலும், யூரோவிற்கு நிகராக 11.9 சதவீதத்தாலும், இந்திய ரூபாவுக்கு நிகராக 11.9 சதவீதமும் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.