மேடை இடிந்து விழுந்ததில் விபத்துக்குள்ளான இலங்கையின் பிரபல இசைக்குழு! samugammedia

இலங்கையில் பிரசித்தி பெற்ற ஃப்ளாஷ்பேக் (Flashback)  இசைக்குழு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இஸ்ரேலில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போதே இவ்வாறு குறித்த இசைக்குழு விபத்துக்குள்ளானது.

அதன்படி, இசை நிகழ்ச்சியின் போது மேடையின் மேற்பகுதி இடிந்து  விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, பாடகி ரைனி சாருகா பாடல்கள்  பாடிய வண்ணம் இருந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் சிலருக்கு காயமடைந்துள்ளதாகவும்  செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply