இன்று (24.09.2023) கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுநகர் கிராம அலுவலர் பிரிவுக்குற்ப்பட்ட பகுதியில் அமைந்துள்ள ரங்கன் குடியிருப்பு பகுதியில் சுமார் 130 குடும்பங்கள் 28 வருடங்களாக வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கான ஓர் நிரந்தரப் பாதையினை அமைத்து தருவதற்கு பலரும் முன் வந்திருந்த பொழுதிலும் தனியார் ஒருவர் வீதிக்காக காணியினை வழங்க முன்வராத நிலையில் 130 குடும்பங்கள் 28 வருடங்களாக மழை வெள்ளங்களில் பாடசாலை மாணவர்கள் மற்றும் அவசர தேவை கருதி வைத்திய சேவையினையும் பெற முடியாத நிலையில் பெரிதும் சிரமப்படுவதாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பிரச்சினை தொடர்பாக பல அரச அதிகாரிகள் பலரிடம் சென்ற பொழுதிலும் எந்த தீர்வும் எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதைக்கு தடையாக உள்ள காணி உரிமையாளர் இப்பகுதி மக்களின் நலன் கருதி வீதிக்கான காணியினை வழங்க முன்வரவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
தற்பொழுது காணியினை கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் இதன் காரணமாக வீதி ஊடாக இரவு வேலைகளில் பெரும் அச்சநிலையில் செல்லவேண்டியுள்ளதாகவும் தயவு செய்து சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் கானி உரிமையாளரிடமிருந்து எமது வீதிக்கான கானியினை பெற்று புதிய வீதியினை புனரமைத்து தந்து இனி வரும் சந்ததியினர் ஆவதற்கு ஓர் நிரந்தர வீதியினை பெற்று தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட கிராமத்தில் வாழும் 130 குடும்பங்களும் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.
மேலும் இப்பகுதியில் வாழும் அனைவருமே நாளாந்த கூலித் தொழிலில் கிடைக்கப் பெறுகின்ற வருமானத்தினை மேற்கொண்டு நாளாந்த ஜீவனோ பயத்தை மேற்கொள்வதாகவும் தமக்கான வீதி ஒன்றினை பெற்று தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் இன்றையதினம் நாளைய சந்ததியினருக்கு சிரமமின்றி பயனிக்க வீதியை பெற்றுக்கொடுப்பதற்கார இன்று கூலி வேலைக்கு கூட செல்லாது ஓர் தீர்வுகளை பெற்று தருவது வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்