'முஸ்லீம் விவாக விவாகரத்து சட்டம் – ஓர் இஸ்லாமிய நோக்கு' புத்தகம் வெளியீட்டு நிகழ்வு…!samugammedia

அஷ்ஷெய்க் கலாநிதி றவூப் செய்ன் எழுதிய “முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் – ஓர் இஸ்லாமிய நோக்கு” எனும்  புத்தக வெளியீட்டு விழா இன்று புதன்கிழமை (27) மாலை புத்தளத்தில் இடம்பெற்றது.

புத்தளம், ரத்மல்யாய RDF மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த புத்தக வெளியீட்டு விழா நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மகளிர் அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தின் விவாக, விவாகரத்து சீர்திருத்த பரிந்துரைகள் பற்றிய சட்டப் பார்வைகள் தொடர்பாக நூலாசிரியர் மிகவும் தெளிவாக இதன்போது தெளிவுபடுத்தினார்.
மேலும், பிக்ஹே, ஷரீஆ, கானூன் வேறுபாடுகளை புரிந்துகொள்ளல், மத்ஹப் பற்றிய விவாதம், முஸ்லிம் விவாக , விவாகரத்து, பலதார மணம்,முஸ்லிம் பெண்களை காழி நீதிபதிகளாக நியமித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.
அத்துடன், நிகழ்வுக்கு வருகை தந்த அனைவருக்கும் குறித்த “முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் – ஓர் இஸ்லாமிய நோக்கு” புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியம் (IWARE) இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *