கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட டிப்போ சந்தியில் 29.09.2023 இன்று இரவு 6.30 மணி அளவில் கயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளாகியது.
குறித்த இவ் விபத்தில் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த கயஸ் ரக வாகனம் வாகன நெரிசல் காரணமாக நிறுத்த முற்பட்ட வேளையில் பின்னால் வாந்த மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் இவ்வத்தி இடம் பெற்றுள்ளது.
கிளிநொச்சி டிப்போ சந்தியானது மாலை நேரங்களில் கடும் வாகன நெரிசல் காணப்படுகின்ற போதும் குறித்த இடத்தில் போக்குவரத்து பொலிஸார் கடமையில் இல்லை