நீதித்துறைக்கு எதிரான அடக்கு முறைகளுக்கு எதிர்ப்பு…! மன்னாரில் நாளை முக்கிய போராட்டம்…!samugammedia

சுயாதீன நீதித்துறையில் அரசியல் தலையீட்டை தடுப்போம் எனும் தொனிப்பொருளில் தொடர்சியாக நாடளாவிய ரீதியில் நீதி மற்றும் பொறுப்பு கூறல் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் நீதித்துறை, நீதிபதிகள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்கு முறைக்கு எதிராக நாளை(04) மன்னார் மாவட்ட இளைஞர்கள் சிவில் சமூக அமைப்பினர் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

மன்னார் பிரதான சுற்றுவட்ட பகுதியில் நாளை காலை 10 மணி தொடக்கம் 12 மணிவரை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெறவுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் தொடர்சியான அடக்குமுறை செயற்பாடுகளை கண்டித்து இடம்பெறும் குறித்த போராட்டத்தில் மன்னார் வாழ் மக்களை கலந்து கொள்ளுமாறு போராட்ட குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply