கண் நோய்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு சுகாதாரத் துறை மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
அத்தோடு இந்த நாட்களில் கண் நோய் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் நிபுணர், கண் சத்திரசிகிச்சை நிபுணர் திரு.கபில பந்துதிலகவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் மத்தியில் பரவலாகப் பரவிவரும் இந்நோய் தொடர்பில் விழிப்புணர்வோடு இருக்குமாறு நிபுணத்துவ கண் சத்திரசிகிச்சை நிபுணர் திரு.கபில பந்துதிலக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.