மத்திய மலைநாட்டில் தொடர் மழையால் மண் திட்டு சரிவு – பெருந்தோட்ட மக்கள் பாதிப்பு! samugammedia

நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியான பொகவந்தலாவை தெரேசியா தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பு தொகுதியொன்றின் பின்பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) மண்மேடு சரிந்து விழுந்ததில் 5 குடியிருப்புக்கள் முற்றாக சேதமடைந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் நிமல் பண்டார தெரிவித்தார். 

தெரேசியா தோட்டத்திலுள்ள முதலாம் லயன் குடியிருப்பு தொகுதியொன்றில் சமையலறைகள் அமைந்துள்ள 5 குடியிருப்புகளின்  பின்பகுதியில் இந்த மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ளன. 

இதன் காரணமாக அக்குடியிருப்புக்களில்  வசித்த 5 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் தற்காலிகமாக அத்தோட்டத்தின் மற்றுமொரு பாதுகாப்பான கட்டடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், குடியிருப்புக்களின் மீது வீழ்ந்துள்ள மண்குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொகவந்தலாவ தெரேசியா தோட்டத்தின் தோட்ட அதிகாரி இமேஷ் போகவத்த தெரிவித்தார்.

தோட்ட முகாமைத்துவம் இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *