ஹர்த்தாலுக்கு எதிர்ப்பை வெளியிட்ட முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர்…!samugammedia

தமிழ் தேசிய கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள ஹர்த்தாலுக்கு தான் ஆதரவு வழங்கப்படுவதில்லை என முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் ஜி. ரி. லிங்கநாதன் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இன்று தமிழ் தேசிய கட்சிகளை சேர்ந்த சிலர் கூடி வவுனியாவிலும் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். 
எனினும் குறித்த கலந்துரையாடல் தொடர்பில் எனக்கு அறியக்கிடைக்கவில்லை.  அத்துடன் குறித்த ஹர்த்தாலுக்கு நான் எனது எதிர்ப்பையும் வெளிப்படுத்துவதுடன் ஆதரவு வழங்கப்போவதில்லை என்பதுடன் தமிழர்களின் போராட்டத்தை வைத்து சிலர் நோகாமல் நுங்கு குடிக்க ஆரம்பித்துள்ளனர் இதற்கு இடம் கொடுக்க முடியாது எனவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *