யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு பருத்தித்துறை நோக்கிப் புறப்பட்ட 750 வழித்தட இ.போ.ச பேருந்தின் சாரதி மீதே அச்சுவேலி பேருந்து நிலையத்தில் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நோக்கி பயணித்த பயணிகளும், அச்சுவேலியில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணிக்க இருந்த பயணிகளும் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்தனர்.
அச்சுவேலி நகர்ப்பகுதகயில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவ இடத்தில் பிரசன்னமானதும் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த நபர் அங்கிருந்து விலகிச் சென்றார்.
இவ்வாறு பொதுமக்கள் முன்னிலையில் பேருந்து சாரதிகள் முரண்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.