கடல்சார் நுணுக்கங்களை கண்டறிய கூட்டுப் பயிற்சி என்னும் பெயரில் அமெரிக்கா அழைப்பு: தாமதிக்கும் இந்தியா!

அமெரிக்கா “ஐ.எம்.எக்ஸ் 2022”  என்னும் கடற்படை கூட்டுப் பயிற்சி அமைப்பு ஒன்றினை உருவாக்கி அந்த அமைப்பினூடாக ஏனைய பலமிக்க மற்றும் எதிர்காலத்தில் தனக்கு ஆபத்தாக இருக்கக்கூடிய நாடுகளுடன் இராஜதந்திர முறையிலான நட்புறவு ஒன்றினை உருவாக்கி அவற்றை கூட்டு கடல்சார் இராணுவ பயிற்சிகளுக்காக அழைப்பு விடுக்கும் புதிய யுக்தி ஒன்றினை பிரயோகப்படுத்தி வருகின்றது. இந்த கூட்டுப் பயிற்சியின் மூலம் மற்றைய நாடுகளின் கடல் சார் அறிவுத்திறன் மற்றும் கடற்படை நுணுக்கங்கள், அவற்றின் பலம் மற்றும் பலவீனம் போன்ற பல விடயங்களை அறிந்து கொள்வதன் மூலம் அமெரிக்கா கடற் பிராந்தியத்தில் தன்னை உறுதியான வல்லரசாக நிலை நிறுத்த முயற்சி செய்து வருவதை அவதானிக்க முடிவதாக ராய்ட்டர் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மூலோபாய தந்திர வலையில் இந்தியாவையும் சிக்க வைப்பதற்கு அமெரிக்கா பல வழிகளில் முயன்று வருவதை காணமுடிகின்றது. குறிப்பாக ரஷ்யா உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவைக் குறித்து நல்லெண்ண அடிப்படையில் தூக்கி வைத்து கொண்டாடியதும், அண்மையில் மெல்பேனில் நடைபெற்ற விசேட வெளியுறவு அமைச்சர்களின் கலந்துரையாடலுக்கு இந்தியாவையும் அழைத்து இந்தியாவின் நலன்மேல் அதிக கரிசனையுடன் செயற்பட்டமை மற்றும் இந்தியாவை அமெரிக்கா தனது நெருங்கிய நண்பன் என வர்ணித்தமை போன்ற பல அண்மைக்கால அமெரிக்காவின் இம்சைகள் இந்தியாவையும் தனது வலைக்குள் சிக்க வைப்பதற்கான முயற்சிகளாகவே சர்வதேச ரீதியில் பார்க்கப்படுகின்றத.

சமீபத்திய காலங்களில் முதன் முறையாக இஸ்ரேலிய கடற்படை அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப் பயிற்சியினை நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இஸ்ரேல் மட்டுமன்றி பாக்கிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா நாடுகளும் இவ்வாறு கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது அழைப்பு இந்தியாவை நோக்கி திரும்பியுள்ள நிலையில் இந்தியா இதற்கு எவ்வாறான பதிலை கொடுக்கப் போகின்றது என்பதை சர்வதேசம் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றது.

இஸ்ரேல் அமெரிக்க உறவு நீண்ட காலத்திற்கு பின் உறுதியான நிலையை அடைந்திருப்பதாகவும், இரு நாடுகளுக்குமிடையில் பாதுகாப்பு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இஸ்ரேல் 2020ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேஸ் மற்றும் பஹ்ரைனுடன் செய்து கொண்ட “ஆபிரகாம்” உடன்படிக்கையினுடாக அமெரிக்காவையும் இணைக்மும் வாய்ப்பு கிட்டியிருப்பதாகவும் இவை ஐரோப்பாவையும், கிழக்கு நாடுகளையும் இணைப்பதற்கு நல்ல சந்தர்ப்பம் எனவும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
   
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து மேற்கொண்ட கூட்டு கடற்படைப் பயிற்சி தொடர்பாக கருத்து தெரிவித்த இஸ்ரேலிய கடற்படைத் தலைவர் டேவிற் சலாமா “அமெரிக்காவுடன் எமது கூட்டு பயிற்சியின் பங்கேற்பானது இரு நாடுகளுக்குமிடையில் பரஸ்பர கற்றல், ஒற்றுமை , சக்தி பரிமாற்றம், மற்றும்  மூலோபாய கூட்டாண்மை போன்றவற்றின் அடிப்படையிலேயே நடைபெற்றதாகவும் கடல் பிராந்தியங்களில் பயங்கரவாதத்தை முற்றாக தடுக்கவும் கடல் எல்லை பிராந்தியங்களை பாதுகாக்கவும், வலுப்படுத்தவும் இப்பயிற்சி துணை புரியும் என தாம் நம்புவதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஐ.எம்.எக்ஸ் 2022” என்னும் அமெரிக்காவின் கடற்படைப் பயிற்சி அமைப்பைக் குறித்து கருத்து தெரிவித்த சலாமா “பல கடல் சார் வல்லூனர்களின் அறிவு மற்றும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டதுடன் நிறைந்த அனுபவங்களுக்கூடாக பணியாற்றக் கூடியவர்களினால் பயிற்சிகள் வழங்கப்படுவது சிறப்பானது என்றும் தெரிவித்துள்ளார். மேற்படி ஒருங்கிணைந்த கூட்டுப் பயிற்சியானது அரேபிய வளைகுடா, அரபிக் கடல், ஓமன் வளைகுடா, செங்கடல் மற்றும் வட இந்தியப் பெருங்கடல் போன்ற உலகின் பாரிய கடல் எல்லைகளை மையப்படுத்தி புவியியல் காலநிலை மாற்றங்களை  உட்படுத்தி இந்த பயிற்சிகள் நடபெற்றதாகவும் கூறப்படுகின்றது. இதில் சிறப்பான விடயங்களாக , கடற்பறை சுரங்கங்கள், தண்ணீருக்கு கீழேயும் மேலேயும் நடநிலைப்படுத்தல், தண்ணீருக்குள் மருத்துவ முதலுதவிகளை வழங்குதல் மற்றும் தண்ணீருக்குள் தேடுதல் நடத்துதல் போன்ற அம்சங்கள் குறிப்பிடத்தக்கதாகும்.

அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் வளைகுடாஅரபு நாடுகளுக்கிடையிலான சிக்கல்களை விரைவில் தீர்த்து வைப்பதற்கு இந்த கூட்டுப் பயிற்சிகள் உதவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எது எவ்வாறானதாக இருப்பினும் இந்தியா தனது தாமதத்தினை வெளிப்படுத்துவதானது அமெரிக்காவின் கண்களில் ஒரு வேளை மண்ணை தூவும் நிலை கூட ஏற்படலாம் என கருத்துக்கள் கணிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *