முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதிகோரியும் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகள் அச்சுறுத்தல்கள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றையதினம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் மன்னாரினை பொறுத்தவரையில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன், மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லவில்லை. தனியார் போக்குவரத்துச் சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
அதேவேளை, அரச போக்குவரத்துச் சேவைகள் வழமை போல் இடம் பெற்றதோடு பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
மேலும் அரச அலுவலகங்கள் மற்றும் வங்கிகளின் செயல்பாடுகள் வழமை போல் இடம் பெற்றது.
மன்னார் நீதிமன்ற செயற்பாடுகள் வழமை போல் இடம்பெற்ற போதும் சட்டத்தரணிகள் மன்றுக்கு செல்லாமல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.