பொலிஸ் காவலில் இருந்த பதினைந்து பேர் கொலை – சபையில் வெளியான அதிர்ச்சித் தகவல் samugammedia

 

கடந்த சில வருடங்களில் பொலிஸ் காவலில் இருந்த பதினைந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஐரோப்பிய மனித உரிமைகள் பேரவை இது தொடர்பில் விரிவாகப் பேசியுள்ளதாகத் தெரிவித்த லக்ஷ்மன் கிரியெல்ல, இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலும்  பொலிசார் தொடர்பில் பெரும் ஏமாற்றம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளிக்கையில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத்,

தற்போது தென் மாகாணத்தில் பொலிஸாரால் விசாரணைகளை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. 

ஐ.பி கொல்லப்பட்டதாகக் கூறி பொலிஸார் பலர் இடமாற்றம் கேட்கின்றனர். காவல்துறைக்கு துபாயில் இருந்து உயிருக்கு அச்சுறுத்தல் வரும் வகையில் அழைப்புகள் வருகின்றன என்று அமைச்சர் கூறினார்.

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி பாதாள உலகத்திற்கு புகட்டிய பாடத்தினாலேயே இன்று பிலிப்பைன்ஸ் உருவாகியுள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர், தெற்கில் பெரும் பயங்கரம் நிலவுவதாகவும், அதற்காக அவர் பேச வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *