தகவல் வழங்கினால் 25 லட்சம்: பொலிஸ் தலைமையகம்

றம்புக்கணை, பெப்.19

றம்புக்கணை – தெலிவல கொடவெஹற ரஜமஹா விகாரையிலிருந்த பெறுமதியான தங்க கலசங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

இதன்படி சந்தேகநபர்களை கைது செய்வதற்கான உரிய தகவல்களை வழங்குபவர்களுக்கு ரூ.25 லட்சம் சன்மானம் வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.

உரிய தகவல்களை வழங்குபவர்கள் தொடர்பான ரகசிய தன்மை பேணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தகவல் வழங்கவேண்டிய தொலைபேசி இலக்கங்கள்
0718 591 772
0718 594 9 24
0112 422 176 – குற்றப்புலனாய்வு திணைக்களம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *