
காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் டெங்கு பரிசோதனையினை மேற்கொள்வது அவசியமாகும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவின் ஆலோசகர் விசேட வைத்திய நிபுணர் அனோஜா வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
காய்ச்சல் ஏற்பட்டு 24 மணிநேரத்திற்குள் பரிசோதனை மேற்கொள்வது அவசியமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
துரிதமாக சோதனை நடத்தும் பட்சத்தில் ,வைரஸை அடையாளம் காண முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 9, ஆயிரத்து 609 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்