குடிநீர் முகாமைத்துவத்துக்காக தனி செயலகம் குறித்து ஐ.நாவிடம் கோரிக்கை

நிலைபேண்தகு அபிவிருத்தி திட்டத்தில் உள்ள ‘பாதுகாப்பான மற்றும் தூய்மையான குடிநீர்’ என்ற இலக்கை 2030 ஆம் ஆண்டுக்குள் அடைவதே தமது எதிர்பார்ப்பாக இருப்பதாகவும், இதற்கான உட்கட்டமைப்பு, நிதி உள்ளிட்ட உதவிகளை ஐ.நாவின் குடிநீருக்கான ஸ்தாபனம் வழங்க வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், ஒன்றிணைக்கப்பட்ட குடிநீர் முகாமைத்துவ கொள்கையின் பிரகாரம் குடிநீர் வழங்கலுக்காக பிரதம அமைச்சின் கீழ் தனியானதொரு செயலகம் நிறுவப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜெனிவாவுக்கு பயணம் மேற்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஐ.நாவின் குடிநீருக்கான ஸ்தாபனத்தின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் ஐ.நாவின் குடிநீருக்கான ஸ்தாபனத்தின் உப தலைவர் யோகானஸ் கல்மன், உலகளாவிய கண்காணிப்பு பணிப்பாளர் வில் ரைட்எட், தலைமை நிபுணத்துவ அதிகாரி கலாஸ் மொல்டிவ்ஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி, அமைச்சின் ஆலோசகர் ஹரித்த விக்கிரமசிங்க ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *