கிருலப்பனை சரணங்கர வீதியிலுள்ள வீடொன்றில் வசிக்கும் பிரபல அமைச்சரவை அமைச்சரின் வீட்டிற்கு மட்டும் சுமார் 12 மில்லியன் ரூபாய் மின்சாரக் கட்டணம் என்று இலங்கை மின்சார சபையின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் வெளிப்படுத்தினார்.
கிருலப்பனை மின்சார சபை அலுவலகத்தின் உள்ளுர் மின் பொறியியலாளர்கள் மின்சாரக் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் சம்பந்தப்பட்ட அமைச்சரின் வீட்டிற்குச் சென்றதாகவும் ஆனால் அவர்கள் கடமைகளைச் செய்ய அனுமதிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் தனது பாதுகாப்புப் படையினரை நியமித்து மின் மீற்றரை அணுக பொறியாளர்களை அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.