யாழ். வலிகாமம் பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் கொத்தணியின் புதிய தலைமை அலுவலகமும் புதிய மண்டபத் திறப்பு விழாவும் இன்று மானிப்பாயில் இடம்பெற்றது.
இதில் பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு மண்டபத்தை திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில், வலிகாமம் பகுதியினைச் சேர்ந்த பனை தென்னைவள சங்கங்களின் தலைவர் கள், ஊழியர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
சுமார் 200 மில்லியன் ரூபா செலவில் புதிய கட்டடத் தொகுதி அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

