யாழில் ஆசிரியர்கள் உரிமை கோரி போராட்டம்

ஆசிரியர்களின் உரிமைகளை கோரிய போராட்டம் ஒன்று இன்று யாழ்ப்பாணம் சென்ஸ்.சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பில் ஆசிரியர்கள் மீது தண்ணீர் தாரை பிரயோகம் மற்றும் உரிமைகளை அடக்குகின்ற அரசாங்கத்தின் செயல்பாடுகளை எதிர்த்து குறித்த போராட்டம் இன்று பாடசாலை நிறைவடைந்ததன் பின்னர் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சுபோதினி அறிக்கையின்படி சம்பளத்தினை அதிகரிக்க வேண்டும் மற்றும் ஆசிரியர்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து பதாகைகளை தாங்கியவாறு அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட்டது.

குறித்த போராட்டம் யாழ்ப்பாணத்தின் மேலும் சில பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply