உயர்தரப்பரீட்சைக்கு இடையூறு ஏற்படுத்திய சுதந்திர கட்சியின் மாநாடு!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாநாட்டால் சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற உயர்தரப்பரீட்சைக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நகரசபையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, கட்சியின் மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களுக்கு ஒலி பெருக்கியின் சத்தங்களை குறைத்து மாணவர்களின் பரீட்சைக்கு இடையூறின்றி கட்சியின் மாநாட்டை நடாத்துமாறு அறிவித்தல் வழங்கப்பட்டது.

இன்று காலை 9.30 மணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாநாடு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் மண்டபத்தில் ஒலி பெருக்கியின் அதிக சத்தத்தினால் அருகிலுள்ள வைசப்பிரகாசா மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த கட்சியின் மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களிடம் பாடசாலையில் உயர்தர மாணவர்கள் பரீட்சை இடம்பெற்றுகிறது. ஒலி பெருக்கியின் சத்தங்களை குறைத்துக்கொண்டு மாநாட்டை நடாத்துமாறு நகரசபையினரால் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.

ஒருசில மணித்தியாலயத்தின் பின்னர் கட்சியின் மாநாடு முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமாகியது. இருப்பினும் மாநாட்டிற்கு வாகனங்களில் வருகைதந்த போது பரீட்சை மண்டபத்தில் இருந்து மாணவர்கள் வெளியே எட்டிப்பார்த்த வண்ணம் இருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.

குறித்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான நிமால் சிறீபால, தயாசிறி ஜெயசேகர, துமிந்த திஸாநாயக்க, முன்னாள் மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்கா, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் மற்றும் நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார் ஸ்டாலின்! – கூட்டமைப்பு, உலகத் தமிழர் பேரவை கூட்டறிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *