மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட சாமிமலை பகுதியில் உள்ள மூன்று தோட்டத்தில் உள்ள மூன்று மாணவர்கள் நேற்று பகல் முதல் காணவில்லை என மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்து உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
இவ்வாறு காணாமல் போன மூன்று பேரும் 15 வயது உடைய சிறுவர்கள் எனவும், சாமிமலை 200 ஏக்கர் தோட்டத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மனோஜ் 15 வயது, சாமிமலை கொழும்பு தோட்டத்தை சேர்ந்த காலிமுத்து புலேந்திரன் வயது 15, சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட தெய்வகந்தை பிரிவைச் சேர்ந்த பி.துஷாந்தன் வயது 15 எனவும் இவர்கள் அனைவரும் நீராட சென்றபின் இன்று வரை வீடு திரும்ப வில்லை என பொலிஸ் நிலையத்தில் அவர்களின் பெற்றோர்கள் புகார் பதிவு செய்து உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இவர்களை தேடும் பணியில் பெற்றோர்கள் உறவினர்கள் மேற் கொண்டு உள்ளனர்.
இது குறித்து தகவல் கிடைத்தால் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார அவர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். 0522277222