மக்களை மிகவும் மோசமான நிலைக்குள் தள்ளியவன் பிரபாகரன்! – டக்ளஸ்

பிரபாகரன் இறந்ததற்காக நான் வேதனையடைகிறேன். ஏனென்றால் அவன் மற்றவர்களுக்கு சயனட்டை கொடுத்து சாகடித்துவிட்டு, தான் சலண்டர் ஆகி செத்துவிட்டது தான் எனக்கு ஒரு வேதனை. அதைவிட வேறு எந்த வேதனையும் எனக்கு இல்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இன்று மானிப்பாய்யில் இடம்பெற்ற பனை, தென்னை கூட்டுறவு சங்கங்களின் கொத்தணியின் அலுவலக திறப்பு விழாவிலே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரபாகரன் எத்தனையோ தடவை என்னை கொல்வதற்கு முயற்சித்தான். அவனால் அது முடியாது. நான் அப்போதே வெளிப்படையாக சொன்னேன், எங்களுடைய மக்களது பிரச்சினைகளை தீர்க்க முன்னர் என்னை யாராலும் கொல்ல முடியாது என்று.

நான் பிரபாகரனை பழிவாங்க முயற்சிக்கவில்லை. எனது ஒரு கண்ணை பிரபாகரன் எடுத்துவிட்டான்.

இன்று இந்த மக்களை மிகவும் மோசமான நிலைக்குள் தள்ளியவன் பிரபாகரன். என்னுடைய நெருக்கமான உறவுகளை காணாமல் ஆக்கியவன். ஆகையால் என்னால் அவனை ஏற்றுக்கொள்ள முடியாது.- – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *