இலங்கையிலிருந்து செவ்விளநீரின் ஏற்றுமதி அதிகரிப்பு…!samugammedia

இலங்கை செவ்விளநீருக்கு சர்வதேச சந்தையில் நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.

மேலும், 2023 ஆம் ஆண்டில் செவ் இளநீரின் ஏற்றுமதி 117 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது குறித்து விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தென்னை அபிவிருத்தி சபை, இலங்கை தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார். 

மேலும் இலங்கையில் தென்னை பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்வதற்கு எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர்  கலந்துரையாடினார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு 11 மில்லியன் செவ் இளநீர் ஏற்றுமதி செய்யப்பட்டு 110 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும் 2023 இல் இதுவரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள செவ் இளநீரின் தொகை 14 மில்லியன் எனவும் இதன் மூலம் கிடைத்த வருமானம் 140 மில்லியன் ரூபா எனவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Leave a Reply