ஐஸ் போதைப் பொருள் பாவனையின் உச்சம்..! நெடுந்தீவில் இளைஞன் உயிரிழப்பு ! samugammedia

நெடுந்தீவில் இறந்த இளைஞர் ஐஸ் போதைப் பொருள் பாவனையினாலே ஏற்பட்ட உயர்குருதி அமுக்கம் காரணமாக மரணித்ததாக உடற்கூற்றுப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நெடுந்தீவு மேற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து அப் பகுதியைச் சேர்ந்த குணாராசா தனுஷன் (வயது 25 ) என்பவரது சடலம் நேற்றைய தினம் இரவு மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

அவரது அம்மம்மா வீட்டில் தங்கியிருந்து நேற்றையதினம் அதிகாலை வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவரை மாலைவரை காணமையால் தேடியபோதே ஆட்களற்ற வீட்டில் இறந்து கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு பரிசோதனகள் மேற்கொள்ளப்பட்டதிலேயே இத்தகவல் வெளியாகியானதாகத் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply