யாழில் கண் வீக்கத்தினால் பாதிக்கப்பட்ட வயோதிப பெண் உயிரிழப்பு…!samugammedia

கண் வீக்கத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வயோதிப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கெருடாவில் தெற்கு, தொண்டைமானாறைச் சேர்ந்த இராசமணி முருகேசு (வயது- 70) என்ற மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை(02) முற்பகல் கண்ணில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக வல்வெட்டித்துறை, ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மறாற்ப்பட்டு அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டபோது அங்கு உயிரிழந்துள்ளார்.
குறித்த மரணம் தொடர்பில் பருத்தித்துறை மரண விசாணை அதிகாரி சதானந்தம் சிவராஜா நேற்று (03) விசாரணைகளை மேற்கொண்டார்.

Leave a Reply