அமலாவின் திருமணம்

நடிகை அமலா பால் தனது ஆண் நண்பரான ஜெகத் தேசாயை திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலாபாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவரின் நெருங்கிய நண்பரான ஜகத் தேசாய் தனது காதலை வெளிப்படுத்தியிருந்தார். இவர்களது திருமணம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பிரபல தனியார் ரெசார்ட்டில் நடைபெற்றுள்ளது

இரு வீட்டார் உறவினர்கள் மற்றும் நெருக்கமான நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்

அதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜகத் தேசாய், ‘இரண்டு ஆன்மாக்கள், ஒரு விதி, என் தெய்வீகப் பெண்ணுடன் இந்த வாழ்நாள் முழுவதும் கைகோர்த்து நடப்பேன்..’ என பதிவிட்டுள்ளார்.

தனது திருமண புகைப்படங்களை பகிர்ந்த நடிகை அமலாபால், ‘எங்களை ஒன்றிணைத்த அன்பையும் அருளையும் கொண்டாடுகிறோம்….. என் தெய்வீக ஆண்மையுடன் திருமணம் செய்துகொண்டேன்.. உங்கள் அன்பையும் ஆசீர்வாதத்தையும் வேண்டுகிறேன்..’ என்று பதிவிட்டுள்ளார்

atha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *