பெண்மைக்கு அழகு விரலுக்கொரு மோதிரம்

பெண்கள் இயற்கையாகவே அழகு என்றாலும் அவர்களுக்கு மேலும் அழகு சேர்ப்பது அணிகலன்கள் தான்.

தங்கம், வெள்ளி, வைரம் என ஒவ்வொறு அங்கத்துக்கும் ஒவ்வொரு அணிகலன் அணியும் போது ஒரு தனித்துவம் உண்டு

இது அழகு என்பதை தாண்டி இதை அணிவதால் ஜோதிட சாஸ்திரப்படியும் , விஞ்ஞான ரிதியாகவும் பல நன்மைகள் இருப்பதாக தெரிகிறது.

ஜோதிட சாஸ்திரப்படி பெண்கள் வெள்ளி மோதிரம் அணிவதால் எண்ணற்ற பலன்கள் உண்டு.

பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய பணவரவு அதிகரிக்கும். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று சத்திய நாராயணா பூஜை செய்துவந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

குறிப்பாக திருமணமான பெண்கள் கால் கட்டை விரலுக்கு பக்கத்தில் இருக்கும் விரலில் வெள்ளி மெட்டி அணிந்து கொண்டால் விரலில் இருக்கும் நரம்புகள் வழியே கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும் என்று கூறப்படுகிறது.

பெண்கள் வெள்ளி மோதிரத்தை அணிந்தால் உடல் குளிர்ச்சி அடையும். இதனால் மனரீதியான பிரச்னைகளில் இருந்து விடுபடலாம் என்று சொல்லப்படுகிறது.

 

ஜோதிட குறிப்புகள் படி, எவ்வளவு பிரச்னைகளை சந்தித்தாலும், கையில் வெள்ளி மோதிரம் என்ற ஒன்று மட்டும் அணிந்து இருந்தால் அந்த பிரச்னைகளிலிருந்து விரைவாகவே வெளிப்பட்டு விடலாம் என கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *