நீர்த்தேக்க பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்…!samugammedia

ஹற்றன் நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள காசல்ரீ கடை வீதியைச் சேர்ந்த  2 பிள்ளைகளின் தந்தை நீர்த்தேக்க பகுதியில் இருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்றிரவு காணாமல் போயிருந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காசல்ரீ கடை வீதியில் உள்ள சனசமூக நிலையத்திற்கு அருகில் நீர்த்தேக்க பகுதியில் இருந்தே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

56 வயது மதிக்கத்தக்க விக்கிரம ஆராச்சி லாகே ஜெய திஸ்ஸ என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

மேலதிக விசாரணைகளை ஹற்றன் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply