இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு…!samugammedia

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், நல்லூர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணி மண்டபத்தில்,  முருக நாம பஜனையும், புராண படன நிகழ்வும் கந்தசஷ்டி விரத காலத்தில்,  முன்னெடுக்கப்படவுள்ளது.  

மாலை 3.00 மணி ஆரம்பமாகும் பஜனை நிகழ்வினைத் தொடர்ந்து, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஆனைப்பந்தி, குருகுலத்தில் நடாத்தப்பட்டு வரும் புராணபடன வகுப்பு மாணவர்களின் புராண படன நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

முதலாம் நாள் – 14.11.2023 செவ்வாய்க்கிழமை, இணுவையூர் ஞான ஏந்தல் மா. ந. பரமேஸ்வரன் குழுவினர் வழங்கும் பஜனை நிகழ்வும் 

இரண்டாம் நாள் – 15.11.2023 புதன்கிழமை, தம்பாட்டி நுனிபுரம் முத்துமாரி அம்மன் ஆலயப் பஜனைக் குழுவினர் வழங்கும் பஜனை நிகழ்வும்

மூன்றாம் நாள் -16.11.2023 வியாழக்கிழமை, கந்தரோடை வீரகத்தி விநாயகர் ஆலய பஜனைக் குழுவினர் வழங்கும் பஜனை நிகழ்வும்

நான்காம் நாள் – 17.11.2023 வெள்ளிக்கிழமை, காலை, நவாலி கதிர்காமமுருகன் பஜனைக்குழுவினர் வழங்கும் பஜனை நிகழ்வும் மாலை, நல்லூர் ஸ்ரீஸ்கந்தபதி கலாமன்றப் பஜனை குழுவினர் வழங்கும் பஜனை நிகழ்வும்

ஐந்தாம் நாள் – 18.11.2023 சனிக்கிழமை, காலை, மட்டுவில் ஓம் நமசிவாய பஜனைக்குழுவினர் வழங்கும் பஜனை நிகழ்வும்  மாலை கந்தரோடை ஓம் நாகபூசணி அம்மன் பஜனைக்குழுவினர் மற்றும் பிரம்மஸ்ரீ கோபாலசர்மா குழுவினர் வழங்கும் பஜனை நிகழ்வும்  இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply