இலங்கையில் ஆற்றுகை எனும் பரீட்சை அறிமுகம் …! நாதன் இராகுலன் தெரிவிப்பு…!samugammedia

தமிழ் மக்களால் தங்கத்தாத்தா எனப் போற்றப்படும் நவாலியூர் சோமசுந்தரப்புலவரால் தமிழழுக்காகவும்  கலைக்காகவும் விட்டுச்சென்ற சேவையை நல்ல நிலைக்கு கொண்டுவரும் வகையில் செயற்படுவதாக சோமசுந்தரப்புலவரின் பூட்டன் நாதன் இராகுலன் தெரிவித்தார்.

நேற்றையதினம் யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

கிறீன்விச் கல்லூரி இங்கிலாந்தில் 2009ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று  பல நாடுகளில் வெற்றிகரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் இன்றையதினம்(11)  இலங்கையில் ஆற்றுகை எனும் பரீட்சையை இங்கு அறிமுகப்படுத்துகின்றோம்.

அதுமட்டுமல்லாது இலங்கை பூராக எதிர்வரும் 24, 25ம் திகதிகளில் 3000 மாணவர்கள் பங்குபற்றும் பரீட்சை இடம்பெறவுள்ளது.

அதேவேளை இன்று இடம்பெறும் ஆற்றுகை நிகழ்விற்கு இந்தியாவிலிருந்து டாக்டர் மதுசுதன் வருகை தந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply