உடன் அமுலாகும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையிலிருந்து ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உத்தியோகப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்றைய தினம் கூடிய போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் நிர்வாக நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் தலையீடு காணப்படுவதனால் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமை நீக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.