கிளிநொச்சியில் 551 காலாட்படை படைப்பிரிவினர் மாணவர்களுக்கு குடிநீர் திட்டம் ஆரம்பித்து வைப்பு! samugammedia

கிளிநொச்சி உருத்திரபுரம் புனித பற்றிமா பாடசாலை மாணவர்களுக்கும் மற்றும் உருத்திரபுரத்தில் வசிக்கும் மக்களுக்கு நீண்ட காலமாக குடிநீர் இல்லாமல் சிரமப்படுவதை கருத்தில் கொண்டு சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக இராணுவத்தினரின் 551 காலாட்படை படைப்பிரிவினர் குழாய் கிணறு அமைத்து குடிநீர் வசதி செய்து கொடுக்கும் நிகழ்வு நேற்று மாலை உருத்திரபுரம் புனித பற்றிமா பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

குடிநீர் திட்டத்தை 11 படைகளின் கஜபாகு படைப்பிரிவினர்  கட்டுமானப் பணிகளை  முன்னெடுத்திருந்தனர் தேவையான மனித வளம் மற்றும் தொழில்நுட்ப பிரிவினர் 551 காலாட்படை படைப்பிரிவின் கண்காணிப்பில் இவ் குடிநீர் திட்டம் அமைத்துக் கொடுக்கப்பட்டது

இவ் குடிநீர் திட்டத்தை 55 படை பிரிவு மேஜர் ஜெனரல் நளின் ஜெயவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இந்  நிகழ்வில் பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர் அருட்தந்தையர்கள் பள்ளி முதல்வர் அயல் பாடசாலை முதல்வர்கள் பங்குபற்றுதலுடன் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.

Leave a Reply