திருகோணமலையில், பெருந்தொகை கஞ்சாவுடன் இருவர் கைது! samugammedia

திருகோணமலை விசேட அதிரடிப்படை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் 10 கிலோ 610 கிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட -முருகாபுரி பகுதியில் வைத்து  இருவர் , விசேட அதிரடிப்படையினரால் இன்று சனிக்கிழமை பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன் போது 38 வயதுடைய பெண் ஒருவரிடமிருந்து 6கிலோ 320 கிராம் கேரளா கஞ்சாவும், 43 வயதுடைய ஆண் ஒருவரிடமிருந்து 4கிலோ 290 கிராம் கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.அதேவேளை கஞ்சா கொண்டு செல்லப்படுவதற்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

Leave a Reply