அடாது பெய்யும் மழையில் விடாது "சொப்பிங்" செய்யும் யாழ் வாசிகள்! சூடுபிடிக்கும் தீபாவளி!! samugammedia

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்துவருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக யாழ்பாணத்திலும் மழை கொட்டித்தீர்க்கிறது.  

ஆனால் மழையையும் பொருட்படுத்தாது தீபாவளி பண்டிக்கைக்கு தயாராகி வருகின்றனர் மக்கள்.

குறிப்பாக யாழ் நகருக்குள்   மக்கள் முண்டியடித்துக்கொண்டு பொருள் கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்க முடிந்தது.

இதனால் நகர்ப்பகுதியில் சன நெரிசல் மற்றும் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளன.

பொருட்களின் விலைகள் ஏனைய தீபாவளி காலங்களை விட அதிகமாக காணப்படுவதனால் இம்முறை தீபாவளிக்கு கடந்த காலங்களை விட மிக குறைவாகவே நடைபாதை வர்த்தக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நாளை தீபாவளி தினத்தை முன்னிட்டு மக்கள் கஸ்டமான காலநிலையையும் கவனத்திலெடுக்காது பண்டிகையை வரவேற்க ஆயத்தமாகிவருகிறார்கள்.

Leave a Reply